1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 21 ஏப்ரல் 2025 (12:24 IST)

ஹோட்டல் ஊழியர் செய்த தவறால் கோபத்தின் உச்சிக்கே சென்ற தோனி… என்ன செய்தார் தெரியுமா?

ஹோட்டல் ஊழியர் செய்த தவறால் கோபத்தின் உச்சிக்கே சென்ற தோனி… என்ன செய்தார் தெரியுமா?
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனால் தோனி கேப்டனான பின்னரும் சிஎஸ்கே அணி வெற்றிப்பாதைக்கு திரும்பவில்லை.

கொல்கத்தா அணிக்கு எதிராக படுமோசமாக தோற்றது. இதனால் தோனி என்ற காற்று வளையம் உடைய ஆரம்பித்துவிட்டதாக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. இதனால் இந்த சீசனோடு தோனி ஓய்வை அறிவித்து விடுவதே நல்லது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேப்டன் கூல் என அறியப்படும் தோனி, கோபத்தின் உச்சிக்கே சென்ற சம்பவம் ஒன்றை சி எஸ் கே அணியில் முன்னர் விளையாடிய டுவெய்ன் ஸ்மித் தெரிவித்துள்ளார். அதில் “ஒருமுறை நாங்கள் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த போது தோனி, வெளியில் இருந்து உணவை ஆர்டர் செய்தார். அந்த டெலிவரி ஆள் உணவைக் கொடுக்க வந்த ஹோட்டல் ஊழியரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் கோபமடைந்த தோனி, அந்த ஹோட்டலை விட்டே காலி செய்துவிட்டார்.”எனக் கூறியுள்ளார்.