திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2023 (07:41 IST)

வெறும் 12 போட்டிகளில் முகமது ஷமி உலகக் கோப்பையில் படைத்த சாதனை!

நேற்று நடந்த இந்தியா vs நியுசிலாந்து போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணியின்  மிட்செல் மிக அபாரமாக விளையாடி சதமடித்தார்.  அவருக்கு உறுதுணையாக ரச்சின் ரவிந்தரா அரைசதம் அடித்தார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

உலகக் கோப்பை தொடரில் முதல் நான்கு போட்டிகளிலும் அணியில் எடுக்கப்படாத முகமது ஷமி முதல் முறையாக நேற்று அணியில் எடுக்கப்பட்டார். தான் தேர்வு செய்யப்பட்ட முதல் போட்டியிலேயே தன்னை நிருபித்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் ஷமி.

இதன் மூலம் அவர் விளையாடிய 12 உலக கோப்பை போட்டிகளில் 36 விக்கெட்கள் வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர்கள் வரிசையில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு முன்னர் ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் 44 விக்கெட்களோடு முதல் இடத்தில் உள்ளனர்.