தசைப் பிடிப்பால் வலிப்பது போல நடித்தேன்… பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ரிஸ்வானின் ஜாலி பதில்!
ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பவுண்டரிக்கும் சிக்ஸர்களுக்கும் பறக்கவிட்டு 50 ஓவர்களில் 344 ரன்கள் சேர்த்தது.
இந்த இலக்கை பாகிஸ்தான் அணி எட்டிப் பிடித்து உலகக் கோப்பை தொடர்களில் மிக அதிக இலக்கை சேஸ் செய்த அணி என்ற பெருமையை படைத்துள்ளது. இந்த போட்டியில் 131 ரன்கள் சேர்த்ததன் மூலம் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார் ரிஸ்வான். பேட்டிங் செய்யும் போது அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்ட ரன்கள் ஓட முடியாமல் போராடினார்.
போட்டிக்குப் பிறகு, ரிஸ்வானிடம் தசைப் பிடிப்பு பற்றி கேட்கப்பட்டது, அதற்கு அவர் மிகவும் நக்கலான பதிலைக் கொடுத்தார். “சில சமயம் தசைப்பிடிப்பால் துடித்தேன், சில சமயம் தசை பிடிப்பு வந்தது போல நடித்தேன். ” என்றார்.