தொடர்புடைய செய்திகள்
- இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?
- 156க்கு ஆல்-அவுட்.. இங்கிலாந்தின் மோசமான விளையாட்டு தொடர்கிறதா?
- இங்கிலாந்துக்கு மீண்டும் தோல்வியா? 124 ரன்களில் 7 விக்கெட் இழப்பு..!
- தோத்தாலும் கம்பீரமாக தோற்று போகணும்! – இங்கிலாந்து வீரர் மொயீன் அலி!
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யா இல்லை!- இந்திய அணிக்கு சிக்கலா?
இங்கிலாந்து மோசமான கிரிக்கெட்டை ஆடி வருகிறது… முன்னாள் கேப்டன் வேதனை!
பெங்களூருவில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது. இதன் மூலம் இந்த தொடரில் நான்காவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட காலியாகியுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
இதையடுத்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை அந்த நாட்டு பல முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அதில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹனும் ஒருவர். அவர் தன்னுடைய அதிருப்தியை “இது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான உலகக் கோப்பை பிரச்சாரங்களில் ஒன்றாக மாறி வருகிறது” என எக்ஸ் தளத்தில் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.