வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (21:24 IST)

உலக சாம்பியனில் பங்கேற்க முடியாத பதக்க நாயகன்!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் பஜ்ரங் புன்யாவுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியாது எனத் தகவல் வெளியாகிறது. 

ஒலிம்பிக்கில் வெண் கலம் வென்று சாதித்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புன்யா வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரது காயம் குணமாக 6 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால், நார்வேயில் வரும் அக்டோபர் 2 ல் தொடங்கும் உலக சாம்பியன் மல்யுத்தப் போட்டியில்  இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  

இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும் அவர் காயம் குணமடைந்த பின் மீண்டும் பங்கேற்று சாதிப்பார் என இணையதளத்தில் அவருக்கு ஆறுதல் பெருகி வருகிறது.