வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (23:20 IST)

ஐபிஎல்-2021 ; ஐதராபாத் அணியின் மேலும் ஒரு வீரர் விலகல்

ஐபிஎல் தொடரில் ஐதரபாத் அணியில் இருந்து மேலும் ஒரு வீரர்  விலகியுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் டி-20 ஐபிஎல் சீசன் இம்முறை இந்தியாவில் நடைபெற்ற நிலையில் கொரொனா 2 வது அலை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

எனவே, மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் 19ல் தொடங்கி, அக்டோபர் 15 ஆம் தேதிவரை  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள டி-20 ஐபிஎல் தொடரின் டிரைலர் நேற்று வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ஐதராபாத் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தான் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது