1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (11:32 IST)

ரஹானேவை நீக்குவதால் எந்த பாதிப்பும் இல்லை… தினேஷ் கார்த்திக் கருத்து!

மும்பை டெஸ்டில் ரஹானேவை நீக்குவதால் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என மூத்த வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் டெஸ்ட்டில் ஓய்வில் இருக்கிறார். இதனால் அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர் 170 ரன்களை சேர்த்து தனது தேர்வு சரிதான் என நம்பவைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த போட்டியில் கோலி வரும் போது அவருக்கு வழிவிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே மோசமான பார்மில் இருக்கும் துணைக் கேப்டன் ரஹானேதான் வழிவிட வேண்டி இருக்கும் என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டியே ரஹானேவின் கடைசி போட்டியாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் ரஹானேவை நீக்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை எனக் கூறியுள்ளார். அவர் அளித்த நேர்காணலில் ‘ ரஹானே ஒருபோட்டியில் அமரவைக்கப்படுவதால், இந்திய அணிக்கு எந்தக் கெடுதலும் வராது. அவரை அமரவைப்பதால் அவர் மீதான் அழுத்தம் குறையும்’ எனக் கூறியுள்ளார்.