1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (17:41 IST)

புது பந்தை எடுக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது… ஷேன் வார்ன் கருத்து!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூர் டெஸ்ட் போட்டி நூலிழையில் டிராவில் முடிந்தது.

கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி நூலிழையில் தப்பியது. ஐந்தாம் நாள் முடிவில் 9 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணியால் கடைசி 9 ஓவர்களில் 10 ஆவது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இந்நிலையில் கடைசியில் ஒரு ஓவர் மீதம் இருக்கும் முன்பே போதிய வெளிச்சம் இல்லை எனக் கூறி நடுவர்கள் போட்டியை டிரா என்று அறிவித்தனர். இது சம்மந்தமாக இந்திய ரசிகர்கள் நடுவர்களின் முடிவை குறை கூறினர்.

ஆனால் சுனில் கவாஸ்கர் மற்றும் ரஹானே ஆகியோர் நடுவர்கள் சரியான முடிவையே எடுத்தனர் என்று கூறியுள்ளனர். ஒவ்வொரு ஓவரின் போதும் நடுவர்கள் வெளிச்சத்தை சோதனை செய்து அதன் பின்னரே முடிவெடுத்தனர். ஒருவேளை அந்த ஒரு ஓவரை நடுவர்கள் வீச அனுமதித்திருந்தால் அது இந்தியாவுக்கு சாதகமான முடிவாகியிருக்கும் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஷேன் வார்ன் கூறியுள்ள கருத்து ஒன்று மிகவும் கவனத்தைப் பெற்றுள்ளது. அது என்னவென்றால் ‘இறுதி நாளில் 80 ஓவர்கள் முடிந்ததும் புதுப்பந்தை எடுக்கலாம் என்ற நிலையில் ரஹானே தொடர்ந்து பழைய பந்தை பயன்படுத்தியது ஆச்சர்யமாக உள்ளது. மேலும் வெளிச்சம் குறைந்து கொண்டே வந்த போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொடுக்காமல் சுழல்பந்து வீச்சாளர்களுக்கே கொடுத்ததும் ஏன் என்று தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.