வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2022 (09:31 IST)

பார்ட்டியில் கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிவு… மேக்ஸ்வெல்லுக்கு நடந்த விபரீதம்!

ஆஸி கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான க்ளென் மேக்ஸ்வெல் கால் எலும்பு முறிவு காரணமாக இன்னும் சில மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் லிமிடெட் ஓவர் ஸ்டார் ப்ளேயர்களில் ஒருவர் க்ளென் மேக்ஸ்வெல். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டம் மூலமாகவும் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.

சமீபத்தில் கிளன் மேக்ஸ்வெல் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட வினிராமன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட அவர், அங்கு ஓடி விளையாடியதில் கீழே விழுந்து, அவர் கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் பார்ட்டியில் குடித்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள அவர், இன்னும் சில மாதங்களுக்கு எந்தவிதமானக் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாத சூழலில் உள்ளார்.