வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (09:33 IST)

நயன்தாரா திருமணம் போலவே ஹன்சிகா திருமணமும் ஓடிடியில்… வெளியான தகவல்!

ஹன்சிகா மோத்வானி வரும் டிசம்பர் 4 ஆம் தேதி சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள்.

சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா வரும் டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் மணக்க உள்ளார். சமீபத்தில் அவர் வருங்கால கணவர் சோஹைல் கதூரியாவின் புகைப்படத்தை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். பாரிஸின் ஈபிள்டவரில் தன் காதலை சோஹைல் வெளிப்படுத்த, ஹன்சிகா வெக்கத்தில் சிவக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர, அது வைரல் ஆகி வருகிறது.

சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளம் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளின் திருமணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.