வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (10:18 IST)

மஞ்சிமா மோகன் – கௌதம் கார்த்திக் திருமணம் எப்போது? வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர்.

இந்நிலையில் அவர்களின் திருமணம் வரும் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.