செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (20:39 IST)

ஆஸ்திரேலியாவுக்கு 209 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா!

hardik
ஆஸ்திரேலியாவுக்கு 209 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது 
 
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடிய நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது 
 
இதனை அடுத்து 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா மிக அபாரமாக விளையாடி 30 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார் என்பதும் கேஎல் ராகுல் 55 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.