வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (08:06 IST)

TNPL கோப்பையை வென்றது லைகா கோவை கிங்ஸ்!

நேற்று நடந்த TNPL கோப்பையின் இறுதிப் போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லைகா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோவை அணி அதிரடியாக விளையாடி, 5 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சுரேஷ் குமார் மற்றும் முகிலேஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய அதிக் உர் ரஹ்மான் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இதன் பின்னர் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 15 ஓவர்கள்  முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் கோவை அணி 7 ஆவது TNPL கோப்பையை வென்று மகுடம் சூடியது.