வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 22 ஜூலை 2015 (16:20 IST)

சீர்திருத்த நடவடிக்கைக்கு அவகாசம் வேண்டும்: லோதா குழு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசசிசிஐயில் சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 மாத கால அவகாசம் வேண்டும் என்று லோதா குழு கூறியுள்ளது.
 
சமீபத்தில் வெளிவந்த ஐபிஎல் சூதாட்ட தீர்ப்பில் சென்னை , ராஜஸ்தான்ஸ் அணிகளுக்கு  2 ஆண்டுகள் தடை என்றும்  இதன் அணி உரிமையாளர்களான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ்குந்த்ரா ஆகிய இருவருக்கும் வாழ்நாள் தடை என்றும் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது லோதா தலைமையிலான குழு.
 
எனினும் பிசிசிஐ சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் பிசிசிஐயின்  சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 5 மாத கால அவகாசம் தேவை படுகிறது என்று லோதா குழு தற்போது தெரிவித்துள்ளது. மேற்கண்ட மனு  அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.