வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 31 ஜனவரி 2016 (15:35 IST)

கடைசி டி20 போட்டி, ஆஸ்திரேலியா 197 ரன் குவிப்பு: வெள்ளையடிக்குமா இந்தியா?

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 197 ரன் குவித்து. இந்திய அணிக்கு 198 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.


 
 
முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியாவிடம் படுதோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி சிட்னியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.
 
ஆஸ்திரேலிய தொடக்கவீரர் கவாஜா 14 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அவருடன் களமிறங்கிய அனுபவ, அதிரடி வீரர் வாட்சன் இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 86 பந்துகளை சந்தித்த வாட்சன் 10 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 124 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
அணியின் மொத்த எண்ணிக்கை 197-இல் வாட்சன் 123 ரன் குவிக்க மற்ற வீரர்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன் குவித்தது.
 
இந்திய தரப்பில் நெஹ்ரா, பும்ரா, அஸ்வின், ஜடேஜா, யுவராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்தது. அது போல இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியை வெள்ளையடிக்க இந்திய அணி வீரர்கள் முற்படுவார்கள். ரோகித் சர்மா, ஷிகர் தவான், கோலி, தோனி என வலுவாக உள்ள இந்திய அணிக்கு இந்த 198 என்ற இலக்கு எட்டிப்பிடிக்கும் இலக்கு தான்.