1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (19:34 IST)

நான்கு நாட்களாக குறைந்த டெஸ்ட் போட்டி; சங்ககரா கருத்து

நான்கு நாட்களாக குறைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிக்கு நான் ரசிகன் இல்லை என இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா கூறியுள்ளார்.


 

 
டி20 போட்டிகள் அறிமுகமான பின்னர் ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டிக்கான ஆதரவு குறைந்து வருகிறது. நடைபெறும் எல்லா டெஸ்ட் போட்டிகளும் ஐந்து நாட்கள் முழுமையாக நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமான டெஸ்ட் போட்டிகளை இழந்து விடக்கூடாது என்பதில் முன்னாள் வீரர்கள் கவனமாக உள்ளனர்.
 
ஐசிசி கடந்த ஆறு வருடங்களில் ஏராளமான மாற்றங்களை செய்துள்ளது. தற்போது தென் ஆப்பரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டி முதன்முதலாக நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்கு ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. 
 
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா கூறியதாவது:-
 
வணிக ரீதியிலான திறன் மற்றும் பொருளாதாரம் குறித்து நான் புரிந்துள்ளேன். அதேவேளையில் பாரம்பரியம் மற்றும் வரலாறு கருத்தில் கொள்ள வேண்டும். நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு நான் பெரிய ரசிகன் கிடையாது. ரசிகர்கள் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புவதில்லை என்பதால் ரசிகர்கள் விருப்பத்திற்கு இது நடைபெறுகிறது. 
 
மேலும் உள்ளூர் டிவி மற்றும் ஸ்பான்சர்களுக்கு இது சாதகமாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் ஐந்து நாட்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது என்றார்.