செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2017 (13:24 IST)

டெஸ்ட் போட்டி: 183 ரன்களுக்கு சுருண்டது இலங்கை அணி!!

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


 
 
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
 
அதனை தொடர்ந்து, இலங்கை அணி இமாலய இலக்குடன் களமிறங்கியது. முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில், 50 ரன்கள் எடுத்து இருந்தது.
 
மீண்டும் இன்று துவங்கிய ஆட்டத்தில், வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் இலங்கை அணியின் ரன் சேர்க்கையில் ஆட்டம் கண்டது. இலங்கை 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.