வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (17:48 IST)

இந்தியாவிடம் சிக்கி தவிக்கும் இலங்கை

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் பேட்டி முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 135 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 352 ரன்கள் பின் தங்கியுள்ளது.


 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடு வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியது.  
 
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 487 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. 
 
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மடிந்தது. 135 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய 352 ரன்கள் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து பாலோ ஆனை தவிர்க்க இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் குவித்துள்ளது. 
 
இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. தற்போது இந்திய அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி போலவே இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.