1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Heart attack to Davood Ibrahim?

தாவூத் இப்ராஹிமுக்கு மாரடைப்பா? உயிருக்கு போராடுவதாகவும் தகவல்

pakistan
நிழல் உலக தாதாவும் மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமானவருமான தாவூத் இப்ராஹிமுக்கும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் தாவூத் உடல்நிலை அபாய கட்டத்தில் உள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் கூறுவதாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது



மும்பை குண்டுவெடிப்பு உள்பட பல வழக்கிற்காக இந்தியாவுக்கு தாவூத் இப்ராஹிமை கொண்டு வர முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
 

ஆனால் இந்த தகவலை தாவூத் இப்ராகிமின் தம்பியும், தேடப்படும் குற்றவாளியுமான சோட்டா ஷகீல் மறுத்துள்ளார் . 'தாவூத் பூரண நலமாக இருப்பதாகவும், அவருக்கு மாரடைப்பு என்பது வதந்தி' என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் அரசு இதுகுறித்து எந்த தகவலையும் வெளீயிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
இந்திய மணல் சிற்ப கலைஞருக்கு ரஷ்யா கொடுத்த தங்கப்பதக்கம்