பிரச்சார வீடியோவில் மனைவியுடன் நடனமாடிய முதலமைச்சர்

CM
Last Updated: புதன், 28 பிப்ரவரி 2018 (13:01 IST)
நதிகள் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ ஒன்றில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 
மும்பை நகரைச் சுற்றி ஓடிய 4 நதிகள் நகர வளர்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மும்பையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்காக மகாராஷ்டிரா மாநில அரசு சார்ப்பில் நதிகள் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த பிரச்சார வீடியோவில் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் பாடல் பாடி நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. மும்பை மாநகராட்சி தலைவர், போலீஸ் கமிஷ்னர் ஆகியோர் விழிப்புணர்வு பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ளனர்.
 
இந்த வீடியோ மும்பையில் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் அவரது மனைவியுடன் நடனமாடியது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேலி செய்வதோடு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :