செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified திங்கள், 23 ஜனவரி 2023 (21:25 IST)

2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த டி-20 வீரர்கள் பட்டியலில் கோலி, யாதவ்!- ஐசிசி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 ஆம்  ஆண்டிற்காக சிறந்த வீரர்களை கொண்ட அணியை அறிவித்துள்ளது.
 

ஐசிசி கிரிக்கெட் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை கொண்ட ஒரு நாள், டி-20, டெஸ்ட் அணியை அறிவிக்கும்.

அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டிற்காக சிறந்த 11 வீரர்களைக் கொண்ட அணியை ஐசிசி தற்போது அறிவித்துள்ளது.

அதில், 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்,கோப்பை வென்ற  இங்கிலாந்து அணியில், 2 வீரர்களை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் இருந்து 3 வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து 2 வீரர்களும்,  நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாவே, இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிசி அறிவித்துள்ள 2022ம் ஆண்டிற்காக டி20 போட்டியில், தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லரும், பாகிஸ்தானின் ரிஸ்வானும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில், 3வது மற்றும் 4 வது வரிசை வீரராக கோலி, யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.