1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified சனி, 21 ஜனவரி 2023 (19:01 IST)

தன் பெற்றோரை 282 முறை கத்தியால் குத்திக் கொன்ற மகன் கைது.

england
இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்கிப்டன் நகரில் பெற்ற மகனே தன் சொந்தப் பெற்றோரை கத்தியால் 282 முறை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் யார்ஷியர் என்ற பகுதியில் 37 வயதுடைய   டேவிட் என்ற நபர்  தன் தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த  நிலையில், பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார்.

இருப்பினும் மீண்டும் அவர் மன நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில், தன் வீட்டில் தாயை உடலில் கத்தியால் 90 இடங்களில் குத்தியும், தந்தையை 180 க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.

பின்னர், அவரே போலீஸாருக்கு போன் செய்து போலீஸார் வரும் வரை வீட்டுத் திண்ணையில் காத்திருந்தார். போலீஸார் வந்ததும் டேவிட்டை  கைதுசெய்து  சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.