செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (14:58 IST)

புள்ளிப் பட்டியலை வைத்து அணியின் தன்மையை கணிக்க முடியாது… கோலி கருத்து!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான கோலி, கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் ஃபார்மில் தடுமாறி வந்த நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய அசுர பார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

நேற்று அவர் ஆர் சி பி அணியை வழிநடத்தினார். போட்டிக்குப் பின்னர் பேசிய அவர் “புள்ளிப்பட்டியலை வைத்து ஒரு அணியின் தன்மையைக் கணிக்க முடியாது. கடைசி கட்டத்தில் புள்ளிப்பட்டியலை பார்த்து என்ன செய்யவேண்டுமோ அதை செய்வோம். டி 20 கிரிக்கெட்டை பொறுத்தவரை விக்கெட் விழுவதை வைத்துதான் போட்டியை வெல்வதற்கான வாய்ப்புகள் தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.