வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 18 மே 2023 (16:02 IST)

கோலிவுட்டில் அடுத்த இழப்பு.... மனோ பாலாவை தொடர்ந்து மீண்டும் ஒரு காமெடி நடிகர் மரணம்!

தமிழ் சினிமாவின் மாபெரும் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான பருத்திவீரன் 2007 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார்.  இந்த படத்தில் பிரியா மணி, சரவணன், பொன்வண்ணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
 
இந்த படத்தில் " பொணம் திண்ணி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து தன் கரகரப்பான குரலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் " செவ்வாழை ராஜூ" . இவர் அப்படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்து பிரபலமானார். அதற்கு முன்னர் கிழக்குச் சீமையிலே படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமானவர். 
 
தொடர்ந்து பலவேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் இறுதி சடங்கு வருசநாடு அருகே உள்ள கோரையூத்து கிராமத்தில் நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.