1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (13:23 IST)

நீங்க கொஞ்சம் எமோஷன கண்ட்ரோல் பண்ணுங்க… கோலிக்கு அபராதம் விதித்த பிசிசிஐ!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் டூபிளஸ்சிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அபார ஆட்டத்தால் இலக்கை நெருங்கியது. ஆனால் வழக்கம்போல வெற்றிக்கு அருகில் சென்று சொதப்பி, மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் பல அனல் பறக்கும் சம்பவங்கள் நடந்தன. அதில் ஒன்றாக அதிரடியாக விளையாடிய சென்னை அணியின் ஷிவம் துபே, ஆட்டமிழந்த போது கோலி, அதை ஆக்ரோஷமாக கொண்டாடினார். இது ஐபிஎல் விதிகளுக்கு எதிரான எனக் கூறி, போட்டிக் கட்டணத்தில் கோலிக்கு 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.