வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (09:42 IST)

அவங்க ரெண்டு பேரும் இருந்திருந்தா 18 ஓவர்லயே முடிச்சிருப்பாங்க… தோனி பாராட்டு!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் டூபிளஸ்சிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அபார ஆட்டத்தால் இலக்கை நெருங்கியது.

ஆனால் அவர்கள் இருவரும் அவுட் ஆனவுடன் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறியதால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது கிளன் மேக்ஸ்வெல் மற்றும் பாஃப் டு பிளஸ்ஸி ஆகிய இருவரும் பேட்டிங் செய்த போது சி எஸ் கே பவுலர்களை தண்ணீர் குடிக்கவைத்தனர். அவர்கள் இருவரும் பேட் செய்த போது ரன் ரேட் 12 பக்கம் இருந்தது. ஆனால் அவர்கள் விக்கெட்களை இழந்தபின்னர் வழக்கம்போல பெங்களூர் அணி சொதப்ப ஆரம்பித்தது.

இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் தோனி “மேக்ஸ்வெல்லும், டு பிளஸ்சியும் களத்தில் இருந்திருந்தால், 18 ஓவரில் போட்டியை முடித்திருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.