செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 ஜனவரி 2022 (10:06 IST)

குழந்தைக்கு அரைசதத்தை டெடிகேட் செய்த கோலி!

நேற்றைய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தென் ஆப்பிரிக்காவில் 3 ஒருநாள் போட்டிகளையும் இழந்து இந்திய அணி வொயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்த மோசமான தோல்வி இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி அரைசதம் அடித்தார். நேற்று அவரின் குழந்தை வாமிகாவின் பிறந்தநாள் என்பதால் அந்த அரைசதத்தை குழந்தைக்கு டெடிகேட் செய்தார். மேலும் கேலரியில் குழந்தையோடு இருந்த அனுஷ்கா சர்மா வாமிகாவின் முகத்தை முதல்முறையாக வெளிப்படையாகக் காட்டினார்.