ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2024 (11:07 IST)

கோலி தன் மகனுக்கு வைத்துள்ள பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரமான கோலிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகரான அனுஷ்கா சர்மாவோடு திருமணம் நடந்தது. அவர்களுக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் முகத்தை இதுவரை வெளி உலகுக்குக் காட்டாமல் இருவரும் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய கோலி, தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக மட்டுமே சொல்லப்பட்டது. ஆனால் அப்போதே கோலி- அனுஷ்கா தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தம்பதியினருக்கு கடந்த 15 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக நேற்று அவரும் அனுஷ்கா சர்மாவும் சமூகவலைதளத்தில் அறிவித்தனர்.

அந்த குழந்தைக்கு ஆகாய் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆகாய் என்ற பெயருக்கு எந்த வடிவமும் அற்ற சிவன் என்று பொருளாம். இந்நிலையில் விராட் கோலி இப்போது தன்னுடைய கையில் சிவன் உருவத்தை டாட்டூவாக பதிந்துள்ளார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.