1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 30 மார்ச் 2024 (07:57 IST)

கோலி கம்பீர் கட்டித் தழுவல்… இதுக்கு ஆஸ்கரே கொடுக்கலாம்…. கலாய்த்துத் தள்ளிய வர்ணனையாளர்!

ஐபிஎல் 17 ஆவது சீசனின் 10 ஆவது போட்டி நேற்று சின்னச்சாமி ஸ்டேடியம் பெங்களுருவில் நடக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட் செய்து 182 ரன்கள் சேர்த்து. அந்த அணியின் கோலி அதிகபட்சமாக 83 ரன்கள் சேர்த்தார்.

அதன் பின்னர் ஆடிய கே கே ஆர் அணி 17 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த அணியின் நரேன், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதம்  அடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

இந்த போட்டியின் இன்னிங்ஸ் இடைவேளையின் போது சந்தித்துக்கொண்ட விராட் கோலியும் கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரும் கட்டித்தழுவிக் கொண்டனர். அவர்கள் இருவரும் கடந்த சீசனில் கடுமையாக மோதிக் கோண்ட நிலையில் இந்த சைகை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

இந்த நிகழ்வின் போது தொலைக்காட்சியில் வர்ணனை செய்துகொண்டிருந்த ரவி சாஸ்திரி “கம்பீரின் இந்த செயலுக்காக அந்த அணிக்கு பேர்ப்ளே விருது கொடுக்கப்படலாம்” எனக் கூறினார். அதற்கு சுனில் கவாஸ்கர் “பேர்ப்ளே விருது மட்டும் இல்லை ஆஸ்கர் விருதே கொடுக்கப்படலாம்” எனக் கலாய்க்கும் விதமாக பேசியுள்ளார்.