திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2022 (15:30 IST)

கேஎல். ராகுல்- அதியா ஷெட்டி திருமணம் விரைவில்!

athiya shetty kl rahul
இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல்  பிரபல நடிகையை விரைவில் திருமணம் செய்ய  உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னணி வீரர் கே.எல்.ராகுல். இவர் இதுவரை இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளிலும், 45 ஒரு  நாள் தொடரிலும், 72 –டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இவர், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகன் அதியா ஷெட்டியை காதலித்து, டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதை சமீபத்தில் சுனில் ஷெட்டியே உறுதிப்படுத்தினார்.

இந்த  நிலையில், கே.எல். ராகுல் – அதியா ஷெட்டியின் திருமணம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்றும், திருமணம் நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.

Edited by Sinoj