வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2015 (13:40 IST)

உலகக்கோப்பை போட்டியின் மோசமான 11 பேர் கொண்ட அணி அறிவிப்பு

உலகக்கோப்பை போட்டியின் மோசமான (நாட் ஃபர்ஸ்ட்) 11 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து இணையத்தளம் ஒன்று அறிவித்துள்ளது.
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் ஐசிசி ஒரு சிறந்த உலகக் கோப்பை அணியை அறிவித்திருந்தது. அதில் நியூசிலாந்தை சேர்ந்த 5 வீரர்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 4 வீரர்களும், தென் ஆப்பிரிக்கவைச் சேர்ந்த 3 வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.
 
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன்
இந்நிலையில் தற்போது இணையத்தளம் ஒன்று மோசமான உலகக் கோப்பை அணி ஒன்றை நாட் பர்ஸ்ட் லெவன் (Not first XI) அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு தலைவராக இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனை அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே ஐசிசியின் கனவு அணியில் இந்திய அணி வீரர்கள் ஒருவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை. அதுபோல இந்த மோசமான அணியிலும் இந்திய வீரர்கள் ஒருவரது பெயரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
வீரர்கள் விவரம் வருமாறு:
 
இயான் மோர்கன் - கேப்டன்/பேட்ஸ்மேன் - இங்கிலாந்து - (90 ரன்கள், சராசரி 18)
 
டிவைன் ஸ்மித் - தொடக்க ஆட்டக்காரர் - வெஸ்ட் இண்டீஸ் (ரன்கள் 93, சராசரி 15.5)
 
குவிண்டன் டி காக் - தொடக்க ஆட்டக்காரர் - தென் ஆப்பிரிக்கா (145 ரன்கள், சராசரி 20.71)
 
கேரி பேலன்ஸ் - பேட்ஸ்மேன் - இங்கிலாந்து - (36 ரன்கள், சராசரி 9)
 
கிருஷ்ண சந்திரன் - பேட்ஸ்மேன் - ஐக்கிய அரபு எமிரேட் - (38 ரன்கள், சராசரி 7.6)
 
ஷாகித் அப்ரிடி - ஆல் ரவுண்டர் - பாகிஸ்தான் - (116 ரன்கள், சராசரி 23.2; 2 விக்கெட்டுகள்)
 
லூக் ரோஞ்சி - விக்கேட் கீப்பர் - நியூசிலாந்து - (73 ரன்கள், சராசரி 12.16)
 
கெவின் ஓ பிரையன் - பந்துவீச்சாளர் - அயர்லாந்து - (408 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள்)
 
ஸ்டூவர்ட் பிராட் - பந்துவீச்சாளர் - இங்கிலாந்து - (4 விக்கெட்டுகள், சராசரி 63.50)
 
மிட்செல் மெக்லினாகன் - பந்துவீச்சாளர் - நியூசிலாந்து - (0/68)
 
கிமார் ரோச் - பந்துவீச்சாளர் - வெஸ்ட் இண்டீஸ் - (1 விக்கெட் 150 ரன்கள் கொடுத்து)
 
பயிற்சியாளர்: பீட்டர் மோர்ஸ் - இங்கிலாந்து