Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொல்லார்ட் உள்ளிட்ட 5 பேரை விடுவித்த மும்பை இந்தியன்ஸ்

Written By vinoth
Updated: ஞாயிறு, 13 நவம்பர் 2022 (08:28 IST)
ஐபிஎல் தொடரில் மிகவும் கவனிக்கப்படும் அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் கைரன் பொல்லார்டு. அந்த அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர். பலமுறை இக்கட்டான நிலைமையில் இறங்கி அணியை வெற்றிப் பெற செய்துள்ளார். அந்த அணிக்காக 12 ஆண்டுகளாக அவர் விளையாடி வருகிறார்.

கடந்த ஆண்டு மெஹா ஏலத்தில் இவரை தக்க வைத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இவர் முன்பு போல சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. இதனால் விரைவில் நடக்க உள்ள மினி ஏலத்துக்காக அவர் உள்பட 5 வீரர்களை தற்போது விடுவித்துள்ளது.

கைரன் பொல்லார்ட், பேபியன் ஆலன், கைரல் மில்ஸ், மயங்க் மார்க்கண்டே, ஹர்திக் சௌக்ளின் ஆகியோரை இப்போது மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்துள்ளது. 

எல்லாம் காட்டு

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..

அடுத்த கட்டுரையில்
Show comments