திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (11:15 IST)

ஐபிஎல் தொடரால் சோர்வான நியுசிலாந்து கேப்டன் – வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு!

ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடிய நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி 20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் நியுசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் மற்றும் ட்ரண்ட் போல்ட் ஆகியோர் தொடர் முழுவதும் விளையாடினர். இதனால் இப்போது நடக்க வுள்ள  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி 20 தொடரில் அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டி 20 தொடருக்கு பின் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரில் அவர்கள் இருவரும் களமிறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.