மூக்குத்தி அம்மன் வெற்றியால் நயன்தாரா எடுத்த முடிவு ! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!
மூக்குத்தி அம்மனின் வெற்றியால் நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தி விட்டாராம்.
நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக பல வருடங்களாக நீடித்து வருகிறார். அவரின் படங்கள் தமிழில் பல கோடி ரூபாய் வரை வசுலித்து வருவதால் அவரின் சம்பளமும் பல கோடிகளில் இருந்து வருகிறது. இந்நிலையில் தனது சொந்த மாநிலமான கேரளாவில் அவரின் சம்பளம் தமிழில் வாங்குவதை விட மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஓடிடியில் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது. அதனால் இப்போது நயன்தாரா தனது சம்பளத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளாராம்.