வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 நவம்பர் 2020 (10:02 IST)

மீனில் கொரோனாவா..? அச்சத்தை போக்க எக்ஸ் அமைச்சர் செய்த செயல்..!

மீன் சாப்பிட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று பரவிய தகவலால் மீன் வியாபரம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாகியும் கொரோனாவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் மெல்ல கொரோனாவிலிருந்து மீள தொடங்கியுள்ளன.
 
இந்நிலையில் மீன் சாப்பிட்டால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று பரவிய தகவலால் இலங்கை மக்கள் பெரும்பாலோனார் மீன்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால் மீன் வியாபரம் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் இந்த அச்சத்தை போக்க இலங்கை முன்னாள் அமைசர் திலீப் வெத ஆராச்சி, செய்தியாளர்கள் சந்திப்பில் மீனை பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார். 
 
மேலும், இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவற்றில் சில மீன்களை மாதிரிக்காக சோதித்த சீன சுங்க துறை அதிகாரிகள் அந்த மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து மீன் இறக்குமதியை சீனா ஒரு வார காலம் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.