செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 செப்டம்பர் 2022 (15:47 IST)

‘பாபர் ஆசமிடம் கேப்டன் பொறுப்பு வேண்டாம் என்று கூறினேன்’… பாகிஸ்தான் வீரர் சொன்ன தகவல்

பாகிஸ்தான் அணிக்கு கடந்த சில வருடங்களாக கேப்டனாக பாபர் ஆசம் செயல்பட்டு வருகிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் அனைத்து வகையான போட்டிகளிலும் வீராட் கோலி  போல ரன்களைக் குவித்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவர் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால் அதில் இருந்து அவரின் பேட்டிங் செயல்பாடு மந்தமாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதுபற்றி பேசியுள்ள காம்ரான் அக்மல்  “ பாபர் ஆசம்மிடம் இப்போது கேப்டன் பொறுப்பை ஏற்கவேண்டாம் எனக் கூறினேன். இன்னும் சில ஆண்டுகள் விளையாடி கோலி மற்றும் ஸ்மித் ஆகியோரின் நிலையை எட்டுங்கள். பின்னர் கேப்டன் பொறுப்பை ஏற்பது மிகவும் எளிதாக இருக்கும் என்று கூறினேன். ஆனால் அவர் இதுதான் சரியான நேரம் என்று நினைத்திருப்பார். அதனால் உடனே கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.