1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (10:22 IST)

ஏமாற்றிய பொங்கல் ரிலீஸ் படங்கள்… தமிழ் சினிமாவுக்கு 600 கோடி இழப்பு?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த ஸ்டார் படங்கள் ரிலிஸில் இருந்து பின் வாங்கியதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆர் ஆர் ஆர், ராதே ஷ்யாம் மற்றும் வலிமை ஆகிய மூன்று பெரிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆக இருந்தன. ஆனால் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததால் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியதை எல்லா படங்களும் ரிலீஸில் இருந்து பின் வாங்கின.

இதனால் சில சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகின. ஆனால் அவற்றின் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கக் கூடிய 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.