செவ்வாய், 25 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (08:22 IST)

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்… இந்திய அணியில் நடந்த மாற்றம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “ இங்கிலாந்து வீரர்கள் பின்பற்றும் பாஸ்பால் அனுகுமுறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும். அதற்கு ஏற்றவாறு திட்டங்களையும் வியூகங்களையும் வகுப்போம்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடக்க உள்ள நிலையில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் மற்றும் ரவிந்தர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுகு பதில் சர்பராஸ் கான் மற்றும் சௌரப் குமார் ஆகிய இருவரும் அணியில் இணைந்துள்ளனர்.