அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை: மருத்துவர்கள் கண்காணிப்பு..!
அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் குரங்கம்மை நோய் தொற்று பல உயிர்களை பலியாக்கிய நிலையில், அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய 26 வயது இளைஞருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயநாடு பகுதியை சேர்ந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், தலசேரி என்ற பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் குரங்கம்மை தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் சமீபத்தில்தான் துபாயிலிருந்து கேரளா திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வெளியான பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran