வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (07:26 IST)

தென்னாப்பிரிக்கா அணிக்கு பின்னடைவு… காயம் காரணமாக இளம் வீரர் விலகல்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்ச்சூரியனில் நடந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 2வது நாள் முடிவில் விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கர் சதமடித்தார். தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 408 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 185 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்க அணி. பின்னர் ஆடிய இந்திய அணி 131 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய ஜெரால்டு கோட்ஸி இரண்டாவது இன்னிங்ஸின் போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 5 ஓவர்கள் மட்டுமே வீசினார். இதனால் அவர் அடுத்து கேப்டவுனில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.