செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2022 (09:31 IST)

முன்னாள் வீரர்களுக்கு பென்ஷன் உயர்வு… பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ உள்ளது. பிசிசிஐ நடத்தும் லீக் போட்டியான ஐபிஎல் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வருவாயாக வருகின்றன. இதையடுத்து தற்போது பிசிசிஐ முன்னாள் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அளித்துவரும் பென்ஷன் தொகையை அதிகமாக்க முடிவு செய்துள்ளது.

இது சம்மந்தமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தன்னுடைய டிவீட்டில் “முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் (ஆண்கள்) மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏறக்குறைய 900 பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். மற்றும் 75% பணியாளர்கள் 100% பென்ஷன் உயர்வைப் பெறுவார்கள்” என அறிவித்துள்ளார்.