1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India South Africa 3rd T20 match

இன்னைக்கும் ஜெயிக்கலைனா அவ்ளோதான்..! – இந்தியா – தென் ஆப்பிரிக்கா பலபரீட்சை!

South Africa
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே நடந்து வரும் டி20 போட்டிகளில் இன்றைய போட்டியிலாவது இந்தியா வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக 2 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இந்த தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டுமென்றால் அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும். இந்த நெருக்கடியான சூழலில் இன்று இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது டி20 போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியிலாவது இந்திய அணி வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
முன்னாள் வீரர்களுக்கு பென்ஷன் உயர்வு… பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு