வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 4 நவம்பர் 2024 (07:21 IST)

சொந்த மண்ணில் 0-3 என படுதோல்வி: சச்சின் கொடுத்த அட்வைஸ்..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்தியா படுதோல்வி அடைந்ததை அடுத்து, சச்சின் டெண்டுல்கர் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்டில் எட்டு விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது டெஸ்டில் 25 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, 3-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வாஷ்அவுட் செய்தது.

இந்திய அணியில் பல அனுபவமுள்ள வீரர்கள் இருந்தபோதிலும், மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்தார். "சொந்த மண்ணில் 0-3 என தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்வது சற்று கடினமாக உள்ளது," என்றும், "தோல்விக்கு காரணம் என்ன என சுய பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம்," என்றும் தெரிவித்துள்ளார்.

"போதிய பயிற்சி இல்லையா அல்லது நன்றாக விளையாடவில்லையா என தெரிந்து கொள்ள வேண்டும்," என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதே நேரத்தில், முதல் இன்னிங்சில் சுப்மன் கில் நன்றாக விளையாடியதாகவும், ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.


Edited by Siva