ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 6 நவம்பர் 2024 (07:25 IST)

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்படுமா?

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார் என்பதும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவில் உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு இந்திய பங்குச் சந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்றால், ஓரளவு தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக மிக மோசமாக சரிந்தது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் மற்றும் ஈரான் போர், ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் ஆகியவை ஆகும்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மாறினால், போரை நிறுத்துவேன் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளதால், அவர் இஸ்ரேல் மற்றும் ஈரான் போரை நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் நின்று விட்டால், இந்தியா உள்பட உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் உயர வாய்ப்பு இருப்பதாகவும், எனவே டிரம்ப் வெற்றி பெற்றால் இந்திய பங்குச் சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், போரை நிறுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுப்பார் என்பது உறுதி இல்லை என்பதால் பங்குச்சந்தை மேலும் இறங்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.


Edited by Siva