வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (19:11 IST)

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடி முடிவு

ஐபிஎல் -2023- 16 வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இம்முறை மொத்தம் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது, லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. அதனால், யார் இம்முறை கோப்பை வெல்வது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி மோதுகின்றது.

இரு அணிக்ளும் டாஸ் போட அழைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

எனவே முதலில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணி பேட்டிங் செய்யவுள்ளது. இதில்,  தொடக்க அணி வீரர்களாக  கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கேல் இருவரும் களமிறங்கவுள்ளனர்.