1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (08:55 IST)

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: கல் வீசியதில் கண்ணாடி காலி!

ஓவைசி பயணித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீச்சில் சேதமடைந்து பரபரப்பு.


ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பயணித்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜன்னல் கண்ணாடி குஜராத்தில் அடையாளம் தெரியாத சிலர் கல் வீசி தாக்கியதில் சேதப்படுத்தப்பட்டதாக அவரது கட்சித் தலைவர் வாரிஸ் பதான் கூறியுள்ளார்.

AIMIM தலைவர் மற்றும் கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர் சபிர் கப்லிவாலா மற்றும் பிற கட்சித் தலைவர்கள் அகமதாபாத்தில் இருந்து சூரத்திற்கு `வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்` இல் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக பதான் கூறினார்.

இந்நிலையில் இந்த நிதியாண்டில் மொத்தம் இருபத்தி ஏழு வந்தே பாரத் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ஆலையில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் அதிக வந்தே பாரத் இயக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம் என்றும், படிப்படியாக வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயில்கள் முழுவதும் குளிரூட்டப்பட்டது என்பதும் பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏழை எளிய மக்கள் செல்ல முடியாத வகையில் இதில் ரயில் கட்டணம் அதிகம்.


Edited By: Sugapriya Prakash