வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 29 நவம்பர் 2023 (11:53 IST)

வாரி வழங்கும் வள்ளலாக மாறிய பிரசித் கிருஷ்ணா… நேற்றைய போட்டியில் படைத்த மோசமான சாதனை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 போட்டி நேற்று கௌகாத்தியில் நடந்தது.  இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணி ருத்துராஜின் அபாரமான சதத்தின் மூலம் 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

இதையடுத்துக் களமிறங்கிய ஆஸி அணியும் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வேல் கடைசி வரை களத்தில் நின்று 48 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து அந்த அணியை வெற்றி பெறவைத்தார். இதன் மூலம் கடைசி பந்தில் ஆஸி அணி இலக்கை எட்டி தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தாராளமாக ரன்களை வாரி வழங்கினார். கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்துவீசிய அவர் ஓவரை கிளன் மேக்ஸ்வெல் பதம் பார்த்தார். மொத்தம் நான்கு ஓவர்கள் வீசிய பிரசித் கிருஷ்ணா 68 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.