1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (07:04 IST)

விஜய் ஹசாரே தொடரில் பெங்கால் அணியை பந்தாடிய தமிழக அணி!

உள்நாட்டு தொடர்களில் மிகவும் முக்கியம் வாய்ந்த தொடர்களில் ஒன்றான விஜய் ஹசாரே தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் தமிழக அணியும் பெங்கால் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய பெங்கால் அணி தமிழக வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே சேர்த்தது. தமிழக அணி சார்பாக சந்தீப் வாரியர் அதிகபட்சமாக 4 விக்கெட்களையும், நடராஜன் மற்றும் அபாரஜித் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 85 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய தமிழக அணியும் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனாலும் தொடக்க ஆட்டக்காரர் நாராயணன் ஜெகதீசன் நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தமிழக அணி 5 விக்கெட்களை இழந்து 85 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.  தமிழக அணி விளையாடிய 2 போட்டிகளையும் வென்று 8 புள்ளிகள் பெற்றுள்ளது.