ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற அயர்லாந்து எடுத்த அதிரடி முடிவு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற அயர்லாந்து எடுத்த அதிரடி முடிவு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியில் அயர்லாந்து டாஸ் வென்ற இதையடுத்து அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதுவரை நடந்த போட்டிகளில் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து இங்கிலாந்து அயர்லாந்து ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. அதேபோல் குரூப் 2 பிரிவில் தென் ஆப்பிரிக்கா இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் வெல்லும் அணி எதுவாக இருந்தாலும் அந்த அணி இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி விட்டு இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran