ஐபிஎல்-2023; சூர்யகுமார் அதிரடி சதம்...குஜராத் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!
ஐபிஎல் இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 218 ரன்கள் எடுத்து, குஜராத் அணிக்கு 219 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
எனவே மும்பை இந்தியன் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், கிஷான் 31 ரன்னும், ரோஹித் சர்மா 29 ரன்னும், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். வினோத் 30 ரன்னும், வதீரா 15 ரன்னும் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து, குஜராத் அணிக்கு 219 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
குஜராத் அணி தரப்பில், ரஷித் கான் 4 விக்கெடும், மொஹித் சர்மா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.